Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று

RADIOTAMIZHA | பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று

ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு இலேசான அறிகுறிகள் தென்பட்டதால், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.

எவ்வாறாயினும், கொரோனா தொற்றுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் தாம் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் இணைந்துகொள்வதாக போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

அனைவரும் இணைந்து இந்த தொற்றை இல்லாதொழிக்க போராடுவோம் எனவும் அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

இறுதியாக அவர் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய இராச்சியத்தில் 11,600-இற்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இதுவரை 578 பேர் உயிரிழந்துள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | பாகிஸ்தானில் பேருந்து மீது ரயில் மோதி பயங்கர விபத்து: 21 பேர் பரிதாபமாக பலி

பாகிஸ்தானில் பேருந்து மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சீக்கியர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. கிழக்குப் பகுதியில் ...

%d bloggers like this: