Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | பிரதமருடன் வட மாகாண ஆளுநர் சந்திப்பு!!

RADIOTAMIZHA | பிரதமருடன் வட மாகாண ஆளுநர் சந்திப்பு!!

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் வட மாகாண ஆளுநர் எஸ். எம் சார்ள்ஸ் ஆகியோருக்கிடையில் சந்திப்பு இன்று (29) முற்பகல் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகளின் பின்னர் வடக்கில் மக்களின் இயல்பு வாழ்க்கையினை வழமைக்கு கொண்டு வருதல் தொடர்பில் இதன்போது பேசப்பட்டுள்ளது.

அத்துடன், சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டுக்குள் பிரவேசிப்பவர்களை தடுத்து நிறுத்துவது தொடர்பிலும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், வடக்கில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு முன்னெடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளன.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் மேலும் 22 கொரோனா நோயாளர்கள் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதற்கிணங்க குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1885 ஆக அதிகரித்துள்ளது. ...

%d bloggers like this: