Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA |பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 296 ரூபா செலவு

RADIOTAMIZHA |பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 296 ரூபா செலவு

ஒருவேளை உணவுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 296 ரூபா செலவிடப்படுவதாக சபாநாயகர் பாராளுமன்றிற்கு அறித்தார்.

ஒருவேளை உணவுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 3,000ரூபா செலவிடப்படுவதாக  வெளியாகியுள்ள ஊடக  செய்தியின்  உண்மை தன்மை தொடர்பாக சபாநாயகர் நாட்டுக்கு தெளிவுபடுத்தவேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கோரியிருந்தார்.

பாராளுமன்றம் நேற்று காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது.

ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்த எஸ்.எம்.மரிக்கார்,

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒருவேளை உணவுக்காக 3,000ரூபா செலவிடப்படுவதாக  புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நடத்தப்பட்ட கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை பார்க்கும், பொது மக்கள் இது உண்மையென நினைத்து எம்மைப் பற்றி தவறான எண்ணம் கொள்வர்.

அதனால் பாராளுமன்ற உறுப்பினர்களின் கெளரவத்தை பாதுகாக்கும் வகையில் பாராளுமன்றத்தில் நாங்கள் எதனை உணவாகக் எடுக்கின்றோம், அதற்கான செலவுகள் தொடர்பாக சபாநாயர் நாட்டுக்கு தெளிவுபடுத்தவேண்டும். பாராளுமன்ற உணவைவிட எமது வீடுகளில் சமைக்கும் சாப்பாடு  நல்லது  என கூறியிருந்தார்.

ஒருவேளை உணவுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 296 ரூபா செலவிடப்படுவதாக சபாநாயகர் பாராளுமன்றிற்கு அறித்தார்.

About VITHUSHA

x

Check Also

பருத்தித்துறை கடலில் கஞ்சா

தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக கேரளா கஞ்சா கடத்தி வந்த மூவர் இன்று(22)பருத்தித்துறை கடலில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோந்தில் ...