Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | பாடசாலைகளை மீளவும் திறப்பது தொடர்பில் முக்கிய அறிவித்தல்

RADIOTAMIZHA | பாடசாலைகளை மீளவும் திறப்பது தொடர்பில் முக்கிய அறிவித்தல்

தற்காலிகமாக தற்போது மூடப்பட்டுள்ள பாடசாலைகளை அடுத்த வாரம் திறக்க முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் ஏற்பட்ட கொரோனா தொற்றாளர்களை சரியாக அடையாளம் கண்டு அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்துள்ளதாக இராணுவ தளபதி மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் அரசாங்கத்திற்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனால் அடுத்த வாரம் பாடசாலைகளை ஆரம்பித்து அதன் பின்னர் பரீட்சைகளை சரியான முறையில் நடத்த முடியும் என அரசாங்கம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என இலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 309 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சூழ்நிலையில் வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 309 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். லெபனான் பெய்ரூட் நகரில் இருந்து ...