Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | பள்ளிவாசல் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு!

RADIOTAMIZHA | பள்ளிவாசல் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு!

இன்று 05ம் திகதி  ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காத்தான்குடி ஸலாமத் ஜும்ஆ பள்ளிவாசலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்ட சம்பவம்  இடம் பெற்றுள்ளது.

காத்தான்குடி தெற்கு எல்லையிலுள்ள ஸலாமத் ஜும்ஆ பள்ளிவாசலின் கட்டிட நிதிக்காக வைக்கப்பட்டிருந்த உண்டியலே உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தப் பள்ளிவாசலுக்குள் இருந்த சிறிய அலுமாரியும் உடைக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல் மூடப்பட்டிருந்த நிலையிலேயே இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் இது தொடர்பாக பள்ளிவாசல் நிருவாகத்தினர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...