Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இந்தியர் உட்பட 10 பேர் பலி

RADIOTAMIZHA | நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இந்தியர் உட்பட 10 பேர் பலி

அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இந்தியர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

சிந்துபால்சோக் மாவட்டத்தின் மேலம்சி நகரில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள், அருகே அமைக்கப்பட்டு இருந்த கூடாரத்தில் தூங்கிக் கொண்டு இருந்துள்ளனர். இந்நிலையில், திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் அவர்களது இருப்பிடம் மண்ணில் புதைந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மண்ணில் புதைந்த 10 பேரை இறந்த நிலையில் சடலங்களாக மீட்டனர்.

அவர்களில் ராஜேந்திர சவுராசியா என்ற இந்தியரும் அடங்குவார். தொடர்ந்து, காயங்களுடன் மீட்கப்பட்ட பாரு ஷா என்ற இந்தியர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

About Radio tamizha

x

Check Also

பிரான்ஸில் கொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம் மேலதிக தகவல்

பிரான்ஸில் நேற்று இலங்கை குடும்பம் ஒன்று அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. Noisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் ...