Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA |நீர்த்தேக்கத்தில் குதித்து இளம் யுவதி தற்கொலைக்கு முயற்சி

RADIOTAMIZHA |நீர்த்தேக்கத்தில் குதித்து இளம் யுவதி தற்கொலைக்கு முயற்சி

ராஜாங்கனை நீர்த் தேக்கத்தில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்த இளம் யுவதி ஒருவரை நேற்று (26) தம்புத்தேகம பொலிஸார் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

நொச்சியாகம, ஒலுவௌ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளம் யுவதியே மன விரக்த்தியில் தற்கொலை செய்யும் நோக்கில் ராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளார்.

இதன்போது, அங்கு கடமையில் இருந்த தம்புத்தேகம பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் உடனடியாக செயற்பட்டு, நீர்த்தேக்கத்திற்குள் பாய்ந்த இளம் யுவதியை பாதுகாப்பான முறையில் மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட குறித்த யுவதி மேலதிக சிகிச்சைக்காக தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி தற்கொலை செய்ய முயற்சித்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

தம்புத்தேகம பொலிஸார் இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About VITHUSHA

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...