Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA |நாட்டை முழு உலகிலும் சிறந்த நாடாக மாற்றி அமைக்கும் வரை சஜித்துக்கு அரசாங்கத்தை கையளிக்க மாட்டோம்.

RADIOTAMIZHA |நாட்டை முழு உலகிலும் சிறந்த நாடாக மாற்றி அமைக்கும் வரை சஜித்துக்கு அரசாங்கத்தை கையளிக்க மாட்டோம்.

இந்த நாட்டை முழு உலகிலும் சிறந்த நாடாக மாற்றி அமைக்கும் வரை சஜித் பிரேமதாசவுக்கோ அல்லது ரணில் விக்ரமசிங்கவுக்கோ கையளிக்க மாட்டோம் என சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியா ரச்சி தெரிவித்தார்.

குருவிட்ட நகரில் அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாரச்சிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகை யில் இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் கட் சியொன்றை அமைத்து நாடு பூராகவும் மக்களுக்கு எமது வேலைத் திட்டங் களை முன்வைத்து ஐந்து வருடங்கள் எதிர்பார்த்திருந்து இந்த அரசாங்கத்தை நாம் அமைத்துள்ளோம்.

அதனால் இந்த நாட்டு மக்களுக்கு சுபீட்சமான நிலையினை உருவாக்கி முழு உலகி லும் சிறந்த நாடாக மாற்றி அமைக் கும் வரை சஜித் பிரேமதாசவுக்கோ அல்லது ரணில் விக்ரமசிங்கவுக்கோ கையளிக்க மாட்டோம்.

இன்று ஐக்கிய தேசியக் கட்சி மக்கள் விடுதலை முன்னணியை விட பின்னோக்கி தள்ளப்பட்டுள் ளது. சஜித் பிரேமதாசவு டைய எதிர்க்கட்சி இன்று பலமிழந்த எதிர்க் கட்சி யாக உள்ளது.

இரத்தினபுரி மாவட்ட மக்கள் பெருந்தொகையான விருப்பு வாக்கு களை அளித்து என் மீது கொண்ட மாபெரும் நம்பிக்கையின் பிரதிபல னாக நான் இன்று மீண்டும் சுகாதார அமைச்சராக நியமனம் செய்யப் பட்டு உள்ளேன். மீண்டும் என்னைதெரிவுசெய்த குருவிட்ட பகுதி மக் களுக்கும் நான் எனது நன்றியினை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகி றேன்.

எனக்கு வாக்களித்த இம்மாவட்ட மக்களை நேரில் சந்தித்து எனது நன் றியினை தெரிவிப்பது எனது கடமை யாக நான் நினைக்கிறேன். அதன் காரணமாகவே உங்களது பகுதிக்கு நேரில் வந்து உங்களை சந்தித்து எனது நன்றியை தெரிவிக்கின்றேன். எதிர்வரும் காலங்களில் மாவட்ட மக்களுக்கு என்னால் இயன்ற சேவைகளை ஆற்றுவதற்கு நான் கட மைப்பட்டுள்ளேன் என அவர் தெரி வித்தார்.

About VITHUSHA

x

Check Also

பருத்தித்துறை கடலில் கஞ்சா

தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக கேரளா கஞ்சா கடத்தி வந்த மூவர் இன்று(22)பருத்தித்துறை கடலில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோந்தில் ...