Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1319 ஆக அதிகரிப்பு

RADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1319 ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1319 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் (26) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 135 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இலங்கையில் அதிகளவிலான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாளாக நேற்றைய தினம் பதிவானது.

இதனடிப்படையில், நேற்று அடையாளம் காணப்பட்ட 127 பேர் குவைத்திலிருந்து வருகைதந்து தனிமைப்படுத்தும் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களாவர்.

ஏனைய 8 பேரும் கடற்படை உறுப்பினர்களாவர்.

இதனிடையே, நாட்டில் இதுவரை தொற்றினால் பாதிக்கப்பட்ட 3 பிரிவினர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக Covid – 19 ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.

இதற்கிணங்க கடற்படையினர், வௌிநாடுகளில் இருந்து வருகைதந்தவர்கள் மற்றும் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தொற்றுக்குள்ளான 595 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் 712 கொரோனா நோயாளர்கள் இதுவரை குணடைந்துள்ளனர்.

நாட்டில் இதுவரை 10 கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | பாடசாலைகளை மீளவும் திறப்பது தொடர்பில் முக்கிய அறிவித்தல்

தற்காலிகமாக தற்போது மூடப்பட்டுள்ள பாடசாலைகளை அடுத்த வாரம் திறக்க முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளரான அமைச்சர் ...