Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1245 பேர் கைது!!

RADIOTAMIZHA | நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1245 பேர் கைது!!

இன்று காலை 06 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1245 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் 336 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இன்று காலை ஆறு மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 13 ஆயிரத்து 468 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் மூவாயிரத்து 353 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு , கம்பஹா களுத்துறை, யாழ்ப்பாணம், புத்தளம், கண்டி ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஏனைய 19 மாவட்டங்களிலும் நாளை காலை 06 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

உயித்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவு

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். இது தொடர்பான கோப்புகள் ...