Home / சினிமா செய்திகள் / RADIOTAMIZHA | நடிகர் ராஜ்கபூரின் மகன் திடீர் மரணம்!!

RADIOTAMIZHA | நடிகர் ராஜ்கபூரின் மகன் திடீர் மரணம்!!

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் ராஜ்கபூரின் மகன் ஷாரூக் கபூர் எதிர்பாராத விதமாக தனது 23 வயதில் மெக்காவில் மரணம் அடைந்தார்.

ஷாரூக் கபூர் தனது தாய் சஜீலா கபூருடன் மெக்காவில் புனிதப் பயணம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று அவர் கடுங் குளிர் மற்றும் உடல் பலகீனம் காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழக்கும் முன் அவருக்கு மூச்சுத் திணறல் மற்றும் உடல் நடுக்கம் இருந்ததாகவும் அது வானிலை மாற்றத்தின் அறிகுறியாக இருக்கக் கூடும் என அவரது தாய் சஜீலா கருதியதாகவும் கூறப்படுகிறது.

பாதிப்பின் தீவிரத்தை அருகில் இருந்தவர்கள் அறியும் முன் அவர் திடீர் என மரணம் அடைந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஷாரூக் படிப்பை முடித்த பின் அவரை நடிப்புத்துறையில் ஈடுபடுத்த ராஜ்கபூர் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About Radio tamizha

x

Check Also

RADIOTAMIZHA | எஸ்.ஜானகி அம்மா நலமாக உள்ளார் – ஜானகி மகன் தகவல்

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி(82). 60 ஆண்டுகளாக சினிமாவில் கான குயிலாகவே பாடி பறந்தார். 17 மொழிகளில் 48 ஆயிரத்திற்கும் ...