Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | தெருவோரங்களில் தங்கியிருந்த ஆதரவற்ற சிலர் வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபத்தில் தங்கவைப்பு

RADIOTAMIZHA | தெருவோரங்களில் தங்கியிருந்த ஆதரவற்ற சிலர் வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபத்தில் தங்கவைப்பு

வவுனியா நகர தெருவோரங்களில் தங்கியிருந்த ஆதரவற்ற சிலர் வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வீதியோரத்தில் பொழுது கழித்துப் பழகியோருக்கு ஊரடங்கு சட்ட உத்தரவு ஒரு பொருட்டல்ல. எனினும், ஊணுக்கும் உறையுளுக்குமான நாளாந்த போராட்டம் தற்போது உக்கிரமடைந்திருக்கிறது.

வவுனியா நகரில் மனித நடமாட்டம் அற்றுப்போக, நேசக்கரங்கள் நீளும் எனும் எதிர்பார்ப்பில் காத்திருந்த ஆதரவற்ற சிலர் இன்று கலாசார மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

வவுனியா பிரதேச செயலாளரின் அனுமதியோடு சமூக ஆர்வலர்கள் சிலர் இணைந்து குடியிருப்பு கலாசார மண்டபத்திற்கு இவர்களை அழைத்துச் சென்றனர்.

முதற்கட்டமாக 8 பேர் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்களையும் அழைத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான சமைத்த உணவுகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எமது ரேடியோ தமிழா  செய்தியாளர் தெரிவித்தார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE    

About Radio tamizha

x

Check Also

உயித்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவு

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். இது தொடர்பான கோப்புகள் ...