Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | தீவிரமடையும் கொரோனா வைரஸ் :இரண்டாவது நபர் உயிரிழப்பு!!

RADIOTAMIZHA | தீவிரமடையும் கொரோனா வைரஸ் :இரண்டாவது நபர் உயிரிழப்பு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கொழும்பு IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 64 வயதுடையவர் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்த இரண்டாவது நபர் இவராகும். மேலும் 6 பேர் ஆபத்தான நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபர் உயரிழந்தார்.

இதேவேளை இலங்கையில் இதுவரை 122 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 11 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About Radio tamizha

x

Check Also

ரஞ்சனுக்கு எதிரான மற்றுமொரு வழக்கு விசாரணை

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு சம்பந்தமாக முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றுமொரு வழக்கை எதிர்வரும் நவம்பர் ...