Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA |திருமண ஆல்பம் செய்து தருவதாக பணமோசடி செய்தவர் கைது.

RADIOTAMIZHA |திருமண ஆல்பம் செய்து தருவதாக பணமோசடி செய்தவர் கைது.

திருகோணமலை மாவட்டத்தின் அக்போபுர  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருமணத்தினத்திற்காக புகைப்படங்கள் அடங்கிய (அல்பம்) செய்து தருவதாக கூறி ஐம்பதாயிரம் ரூபா பணத்தினை மோசடி   செய்த நபர் ஒருவரை அடுத்த மாதம் 7ஆம் திகதி  வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமில குமாரி ரத்னாயக்க இன்று (27) உத்தரவிட்டார்.

அக்போபுர, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் திருமணம் நிகழ்வு ஒன்றிற்காக  புகைப்படங்கள் அடங்கிய அல்போம்  செய்து தருவதாக கூறி ஐம்பதாயிரம் ரூபாய்  பணத்தினை பெற்று மோசடி செய்து தலைமரைவாக இருந்த நிலையிலேயே  பணத்தினை வழங்கியவர் அக்போபுர பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்து கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

About VITHUSHA

x

Check Also

மேலும் 17 பேர் நாட்டை வந்தடைந்தனர்

மேலும் 17 பேர் இலங்கை வந்தடைந்தனர்…! அபுதாபியிலிருந்து 5 பேரும், கட்டாரிலிருந்து 12 பேரும் என, 17 பேர் இன்று ...