Home / சமையல் / RADIOTAMIZHA | தித்திப்பான ஜிலேபி

RADIOTAMIZHA | தித்திப்பான ஜிலேபி

ஜிலேபி செய்ய தேவையான பொருட்கள்:

மைதா மாவு – 1
கப் கார்ன் மாவு – 3
டேபிள் ஸ்பூன் தயிர் – 3/4 கப்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
புட் கலர் – சிறிதளவு
சீனி – 2 கப்
பேக்கிங் பவுடர் – 1/4 டீஸ்பூன்

ஜிலேபி செய்முறை:
முதலில் ஒரு பவுலில் மைதா மாவு, கார்ன் மாவு, தயிர் மற்றும் நெய் சேர்த்து அதனுடன் புட் கலர் உங்களுக்கு ஜிலேபி எந்த நிறத்தில் வேண்டுமோ அந்த நிறத்தில் புட் கலர் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக மாவினை கரைத்து வைத்துக்கொள்ளவும். கரைத்த இந்த மாவினை 8 முதல் 12 மணிநேரம் வரை புளிக்க வைக்க வேண்டும். பிறகு ஜிலேபிக்கான சீனி கரைசலை தயார் செய்ய ஒரு பாத்திரத்தில் சீனி போட்டு அதனுடன் தண்ணீர் சேர்த்து அரை கம்பி பதம் வரும் வரையில் அடுப்பில் வைத்து இறக்கவும். பிறகு தயாராக உள்ள மாவில் பேக்கிங் சோடா சேர்த்து மீண்டும் அதனை கரைத்து கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கரைத்து வைத்துள்ள மாவினை ஜிலேபி போன்று வட்ட வடிவில் ஊற்றி அதனை நன்றாக வேகவிட்டு எடுத்து அதனை 30 நொடிகள் வரை சக்கரை பாகில் ஊறவைத்து எடுத்தால் சுவையான ஜிலேபி தயார். [ஜிலேபி மாவு தயாராக இருந்தால் பத்து நிமிடத்தில் ஜிலேபி தயாராகிவிடும் ]

 

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About VITHUSHA

x

Check Also

RADIOTAMIZHA | ருசியான ஐயங்கார் புளியோதரை

நமது வீட்டில் செய்யப்படும் புளியோதரைக்கும், கோவிலில் நாம் உண்ணும் புளியோதரைக்கும் வித்தியாசம் உண்டு. சுவை கொஞ்சம் வேறுபடும் அளவிற்கு ஐயங்கார் ...

%d bloggers like this: