Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | தபால் மூல வாக்கு பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

RADIOTAMIZHA | தபால் மூல வாக்கு பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

பொதுத் தேர்தலில் தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளை எண்ணும் பணி 66 மத்திய நிலையங்களில் நாளை காலை 7.00 மணிக்கும் 8.00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்களிப்பின் தொகுதி மட்டத்திலான முதலாவது உத்தியோகபூர்வ பெறுபேற்றை நாளை நண்பகல் 12.00 மணிக்கு பின்னர் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இறுதி தேர்தல் பெறுபேறுகள் நாளை நள்ளிரவிற்கு முன்னர் வழங்கக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். விருப்பு வாக்கு பெறுபேறுகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு முன்னர் முழுமையாக வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

About இனியவன்

x

Check Also

கிளிநொச்சியில் மறைத்து வைத்திருந்த வாள்கள்

கிளிநொச்சி- பளை, முல்லையடி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மூன்று வாள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. ஏ9 வீதிக்கு அருகாமையில், மின்சார ...