Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 233 பேர் விடுவிப்பு

RADIOTAMIZHA | தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 233 பேர் விடுவிப்பு

யாழ்ப்பாணம் கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 233 பேர் இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பு நவடிக்கையினை மேற்கொண்டுவரும் அரசாங்கத்தினால் வெளிநாட்டில் இருந்து நாட்டிற்கு திரும்பிய அனைவரும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

அதே நேரம்  வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களிலும் இந்த தனிமைப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன்படி யாழ்.மாவட்டத்தில் கொடிகாமம் மற்றும் பலாலி படைமுகாங்களில் தனிமைப்படுத்தல் நிலையம் உள்ளது.

இந்த நிலையில் கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த 233 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதணை மேற்கொள்ளப்பட்டதுடன், வீடுகளுக்கு திரும்பும் அவர்களை சமூக இடைவெளி பேணுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல்

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று(புதன்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதேவேளை, 20ஆவது ...