Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து 310 பேர் வெளியேற்றம்!!

RADIOTAMIZHA | தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து 310 பேர் வெளியேற்றம்!!

வவுனியா பம்பைமடு, பெரியகாடு இராணுவ முகாம் மற்றும் வேலன்குளம் விமானப்படை முகாம் என்பவற்றில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 310 விமான பயணிகள் இன்று காலை விடுவிக்கப்பட்டனர்.

வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா பம்பைமடு பெரியகாடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் முகாமிற்கு கடந்த 16 ஆம் திகதி 120 விமான பயணிகள் கொண்டுவரப்பட்டிருந்தனர்.

இத்தாலி, தென்கொரியா, பிரித்தானியா, பிரான்ஸ் நாட்டவர்கள் குறித்த முகாமிற்கு கொண்டு வரப்பட்டிருந்ததுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கபட்டு கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About Radio tamizha

x

Check Also

மஞ்சள் தூளின் அதிகபட்ச சில்லறை விலை

மஞ்சள் தூள் கிலோ ஒன்றுக்கான அதிக பட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் ...