Home / தொழில்நுட்ப செய்திகள் / RADIOTAMIZHA |டெக்னோ பிராண்டின் புதிய ஸ்மார்ட் தொலைபேசி விரைவில் அறிமுகம்

RADIOTAMIZHA |டெக்னோ பிராண்டின் புதிய ஸ்மார்ட் தொலைபேசி விரைவில் அறிமுகம்

டெக்னோ தொலைபேசி நிறுவனம் ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட் தொலைபேசியினை எதிர்வரும் 17ஆம் திகதி ப்ளிப்கார்ட் தளத்தின் ஊடாக இந்தியாவில் அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளதாக அந்நிறுவனம் தனது ருவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

டீசர் விவரங்களின் படி புதிய ஸ்மார்ட் தொலைபேசி, வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, பின்புறம் கைரேகை சென்சார், 6000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, நான்கு பிரைமரி கமெராக்கள் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. அத்துடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், கறுப்பு மற்றும் நீல நிறங்களில் கிடைக்கிறது.

மேலும் மைக்ரோ யு.எஸ்.பி போர்ட், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட் தொலைபேசியை பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் மூன்று மணி நேரத்திற்கு பயன்படுத்தும் வசதி வழங்குகிறது.

புதிய டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட் தொலைபேசியின் விலை 9,999 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஸ்மார்ட் தொலைபேசியின் இதர விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About VITHUSHA

x

Check Also

RADIOTAMIZHA | கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் டிக் டாக் செயலி நீக்கம்!!

மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டிக்-டாக் ...