Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | ஜப்பானின் 7 மாவட்டங்களில் அவசர நிலை பிரகடனம்

RADIOTAMIZHA | ஜப்பானின் 7 மாவட்டங்களில் அவசர நிலை பிரகடனம்

நகர்ப்புறங்களில் கொரோனா தொற்று நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதன் காரணமாக இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் டோக்கியோ, ஒசாகா உட்பட மேலும் ஐந்து மாவட்டங்களில் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேயினால் செவ்வாயன்று அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
மே மாதம் 6ஆம் திகதிவரை நீடிக்கவுள்ள இந்த அவசர நிலையின்போது, கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை அமுல்படுத்த ஆளுநர்களுக்கு இந்த அவசர நிலை உதவும்.

பொதுமக்களை வீடுகளிலேயே தங்கி இருக்குமாறும், பாடசாலைகள் மற்றும் ஏனைய அலுவலகளை மூடுமாறும் அவசர நிலை பிரகடனம் மூலம் கோருவதற்கு ஆளுநர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு சட்டபூர்வமாக அபராதம் விதிக்கப்படுவது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

ஜப்பானில் முதல் தடவையாக அறிவிக்கப்பட்டுள்ள இத்தகைய பிரகடனததின் பிரகாரம் எடுக்கப்படும் நடவடிக்கைகளினால் மக்களின் உரிமைகளும் சுதந்திரங்களும் ஓரளவு குறையக்கூடும் எனக் கருதப்படுகின்றது.

ஆனால், கொவிட் – 19இனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் போன்ற கடுமையான முடக்கத்துக்கு ஜப்பானிய சட்டத்தின் வரம்புகள் வழிவகுக்காது என கருதப்படுகின்றது

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் மத்திய மாநிலமான கோகி நகரில் ஒரு பரபரப்பான வீதியில் பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழந்துள்ளனர். ...