Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | சைக்கிளிலேயே ஒரு லட்சம் மைல் தூரத்தை கடந்த 95வயது முதியவர்

RADIOTAMIZHA | சைக்கிளிலேயே ஒரு லட்சம் மைல் தூரத்தை கடந்த 95வயது முதியவர்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த 95வயது முதியவர் ஒருவர் சைக்கிளிலேயே ஒரு லட்சம் மைல் தூரத்தை கடந்துள்ளார்.

Bob Mettauer என்ற பெயர் கொண்ட அந்த முதியவர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சைக்கிள் ஓட்டத் தொடங்கினார். தினமும் 9 மைல் தூரம் சைக்கிள் ஓட்டத் தொடங்கிய அவர் கடந்த செவ்வாயன்று ஒரு லட்சம் மைல் தூரத்தை கடந்து சாதனை படைத்தார்.

இந்த சாதனையை கொண்டாடும் வகையில் நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் கொண்டாடி மகிழ்ந்தனர். தள்ளாத வயதிலும் அயராது சைக்கிள் ஓட்டும் இவரை செல்லமாக பை சைக்கிள் பாப் என்று அவரது நண்பர்கள் அழைப்பார்களாம். அடுத்த மாதம் 18 ந்தேதி தனது 96வது பிறந்த நாளை அவர் கொண்டாட உள்ளார்.

About இனியவன்

x

Check Also

4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்டத்தில் உள்ளது . ட்ரம்ப்

அமெரிக்காவில் 4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனை நிலையில் உள்ளதென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸை தடுக்கும் ...