Home / சுற்றுலா / RADIOTAMIZHA |சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஏரி

RADIOTAMIZHA |சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஏரி

இலங்கையில் மத்திய மாகாணத்திலுள்ள மாத்தளை மாவட்டத்தில் காணப்படும் செம்புவத்த ஏரி, சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் செல்லும் ஓர் இடமாக அமைந்துள்ளது.

இந்த ஏரி மாத்தளை, எல்கடுவ தேயிலைத் தோட்டத்தின் மலை உச்சியில் அமைந்துள்ளது. முதலில் ஏரிக்குள் நுழையும் போது அங்குள்ள தேயிலைச் தொழிற்சாலையின் நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், இந்த ஏரி ஆழமாக இருப்பதன் காரணமாக, ஒருசில பகுதிகளில் நீராடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், செயற்கை நீர்த் தடாகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஓய்வெடுக்கச் சிறிய குடில்கள் ஏரியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளதுடன், பல கடைகளும் காணப்படுகின்றன.

குறித்த ஏரியைப் பார்வையிடுவதற்கு, உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் மாத்திரமின்றி, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் வருகை தருகின்றனர்.

About VITHUSHA