Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | சீனாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான எதிர்ப்பலைகள்

RADIOTAMIZHA | சீனாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான எதிர்ப்பலைகள்

கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசிக்க ஐநா.பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டம் காணொலி மூலம் நடைபெற உள்ளது.

கடந்த மாதம் சீனாவின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கோவிட்-19 நோய் குறித்து விவாதிக்க விடாமல் தடுக்கப்பட்டது. தலைமையில் இருந்து சீனா விலகிய மூன்று நாட்களுக்குப் பிறகு நிரந்தர உறுப்பு நாடுகள் அல்லாத 10 நாடுகள் ஐநா.பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரசிடம் மூடிய கதவுகளிடையே ஒரு கூட்டத்தைக் கூட்டி கொரோனா குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தின.

தலைமைப் பொறுப்பில் தற்போது உள்ள டோமினிக் குடியரசு வலியுறுத்தியதை அடுத்து அவசரமாக ஐநா.பாதுகாப்பு கவுன்சிலைக் கூட்ட திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் காணொலி மூலம் நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியபின் ஐநா.பொதுச்செயலாளர் முறைப்படி தேதியை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சீனாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தால் அதை எதிர்கொள்வதற்கு ரஷ்யாவும் சீனாவும் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் மத்திய மாநிலமான கோகி நகரில் ஒரு பரபரப்பான வீதியில் பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழந்துள்ளனர். ...