Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | சீனாவில் பரவி வரும் கெரோனா வைரஸ்:விமான நிலையத்தில் பயணிகள் விசேட பரிசோதனை

RADIOTAMIZHA | சீனாவில் பரவி வரும் கெரோனா வைரஸ்:விமான நிலையத்தில் பயணிகள் விசேட பரிசோதனை

சீனாவில் வேகமாக பரவி வரும் கெரோனா வைரஸ், நாட்டில் பரவாதிருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளது.

இதன் ஒரு கட்டமாக விமான நிலையத்தின் சுகாதார பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

தடிமன், போன்ற அறிகுறிகளுடன் சீனாவிலிருந்து நாட்டிற்கு வருகை தரும் பயணிகள் விசேட பரிசோதனைக்குட்படுத்தபடவுள்ளனர்.

கொரோனா வைரஸ் நாட்டில் பரவும் அபாயம் தற்போது இல்லை எனவும் தொற்று நோய் ஆய்வு பிரிவின், விசேட நிபுணர் டொக்டர் சமரவீர தெரிவித்துள்ளார்.

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வுஹன் நகரில்குறித்த வைரஸினால் இரண்டு நாட்களுக்குள் 136 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வுஹான் நகரில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | டெக்ஸ்டெக் ஸ்ரீலங்கா 2020 கண்காட்சி மார்ச் 5 ஆம் திகதி ஆரம்பம்

டெக்ஸ்டெக் ஸ்ரீலங்கா 2020 என்ற சர்வதேச கண்காட்சி மார்ச் மாதம் 5 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை கண்காட்சி ...

%d bloggers like this: