Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | சிகரெட் விற்பனையை தடை செய்யுமாறு கோரிக்கை

RADIOTAMIZHA | சிகரெட் விற்பனையை தடை செய்யுமாறு கோரிக்கை

கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு சிகரெட் விற்பனைக்கு தடை செய்யுமாறு வைத்திய அதிகாரிகள் மற்றும் கல்வியலாளர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இறப்பிற்கும் புகைத்தலுக்கும் இடையில் உள்ள தொடர்பினை சுட்டிக்காட்டியுள்ள நிலையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விடயம் குறித்து முன்னதாக பல்வேறு வைத்திய நிறுவனங்கள் அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவித்திருந்த நிலையில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு , ராஜரட்ட பலகலைக்கழகத்தின் சுகாதார மேம்பாட்டுத் துறையினரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சிகரெட் விற்பனையை தடை செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About Radio tamizha

x

Check Also

மன்னாரில் மஞ்சள் கட்டிகளுடன் இருவர் கைது.

மன்னாரில் ஒருதொகை உலர் மஞ்சள் கட்டிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் ...