Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | சாவகச்சேரியில் கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு!!

RADIOTAMIZHA | சாவகச்சேரியில் கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு!!

கொரோனோ வைரஸ் தாக்கத்தைக் கட்டப்படுத்தும் நோக்கில் யாழ் மாவட்டத்தின் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை இன்று 31ம் திகதி சாவகச்சேரியில் முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பிலிருந்த வந்துள்ள விசேட குழுவினர், விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் மற்றும் சுகாதாரதப் பிரிவினர் இணைந்து முன்னெடுத்து வருகின்ற இந்நடவடிக்கை யாழ் நகரில் ஆரம்பித்து தொடர்ச்சியாக பல்வேறு இடங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றது.

இதன்தொடராக இன்று சாவகச்சேரிப் பகுதியின் பல இங்களிலும் கிருமி தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

குறிப்பாக சாவகச்சேரி பஸ் நிலையம், பொதுச் சந்தை, புகையிரத நிலையம், பிரதேச செயலகம், வங்கிகள் உள்ளிட்ட பல இடங்களிலும் கிருமி நீக்கி விசிறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About Radio tamizha

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...