Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | சர்வதேச கிங்பொக்சிங்சில் சாதனை படைத்த வவு­னி­யா மாண­வர்­கள்

RADIOTAMIZHA | சர்வதேச கிங்பொக்சிங்சில் சாதனை படைத்த வவு­னி­யா மாண­வர்­கள்

பாகிஸ்தான், லாகூர் பஞ்சாப் பல்­க­லைக்­க­ழக உள்­ளக அரங்கில் நடை­பெற்ற பாகிஸ்தான் இலங்கை சவேட் கிங்­பொக்சிங் பகி­ரங்க சர்­வ­தேச போட்­டியில் இலங்­கைக்கு 11 தங்கப் பதக்கங்களும் 8 வெள்ளிப் பதக்­கங்­களும் கிடைத்­தன. இப் போட்­டியில் இலங்கை சார்­பாக பங்கு பற்­றிய 21 பேரில் வவு­னி­யாவைச் சேர்ந்த ஏழு மாண­வர்­களும் பதக்­கங்கள் வென்று வர­லாறு படைத்­தமை விசேட அம்­ச­மாகும்.

சவேட் கிங்­பொக்சிங் என்­பது கைளாலும் கால்­க­ளாலும் குத்­து­விடும் போட்­டி­யாகும். பாகிஸ்தான் வீரர்­க­ளுக்கும் இலங்கை வீரர்­க­ளுக்கும் இடை­யி­லான இரு­த­ரப்பு சவேட் கிங்­பொக்சிங் பகிரங்க சர்­வ­தேச போட்­டி­யாக இது நடத்­தப்­பட்­டது.

இப் போட்­டியில் இலங்கை சார்­பாக பங்­கு­பற்­றிய வவு­னியா பண்­டா­ரி­குளம் விபு­லா­னந்தா கல்லூ­ரியின் எஸ். சஞ்­சயன் (18 வயது) மற்றும் பி. ராகுல் (17 வயது), வவு­னியா நெடுக்­குளம் கலை­மகள் மகா வித்­தி­யா­ல­யத்தின் கெ. நிரோஜன் (16 வயது), இலங்கை திருச்­சபை தமிழ் கலவன் பாட­சா­லையின் ஆர்.கெ. கெவின் (11 வயது) ஆகிய நால்­வரும் தங்கப் பதக்­கங்­களை வென்­றெ­டுத்­தனர்.

அத்­துடன் வவு­னியா பண்­டா­ரிக்­குளம் விபு­லா­னந்தா கல்­லூ­ரியின் ரி. நாக­ராஜா (18 வயது), வவுனியா காமினி மகா­வித்­தி­யா­ல­யத்தின் எஸ். சிறி­தர்சன் (18 வயது), வவு­னியா தமிழ் மத்தியமகா­வித்­தி­யா­ல­யத்தின் வி. வசீ­கரன் (17 வயது) ஆகியோர் வெள்ளிப் பதக்­கங்­க­ளையும் வென்­றனர்.

வடக்கு மாகாண கிக்­பொக்சிங் பயிற்­று­விப்­பா­ளரும், வடக்கு மாகாண ஏழாம் அறிவு தற்காப்புக்கலை சங்கத்தின் தலைவருமான எஸ். நந்தகுமார் இந்த மாணவர்கள் எழுவருக்கும் பயிற்சி அளித்து வருகின்றார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | சற்று முன் இடம்பெற்ற விபத்து: ஐவர் பலி பலர் காயம் புகைப்படங்கள் உள்ளே

சற்று முன் (இரவு 8.20) வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதியதில் ஐவர் பலியாகியதுடன் பலர் ...

%d bloggers like this: