Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | சட்­ட­வி­ரோ­த­மாக உடும்­பு­களை கொன்று தீயில் வாட்டிய அறுவர் கைது!!

RADIOTAMIZHA | சட்­ட­வி­ரோ­த­மாக உடும்­பு­களை கொன்று தீயில் வாட்டிய அறுவர் கைது!!

நாவுல, புப்­பி­லிய, பம்­ப­ர­க­ஹ­வத்த பாது­காப்பு வனப்­ப­கு­திக்குள் சட்­ட­வி­ரோ­த­மாக நுழைந்து உடும்­பு­களை கொன்று அவற்றை தீயினால் வாட்டிக் கொண்­டி­ருந்த அறுவர் வன­ஜீ­வ­ரா­சிகள் அதி­கா­ரி­களால் கைது செய்­யப்­பட்­டு இவர்­க­ளி­ட­மி­ருந்து கொல்­லப்­பட்ட எட்டு உடும்புகளை மீட்ட­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

அரச வனப்­ப­கு­தியில் புகை வெளி­யே­று­வதை அவ­தா­னித்த ஏல­ஹெர வன­ஜீ­வ­ரா­சிகள் அலு­வ­லக அதி­கா­ரிகள் சிலர் அது தொடர்பில் சோத­னை­யிட்­ட­ போது, உடும்­பு­களை தீயினால் சுட்டுக் கொண்­டி­ருந்த சந்­தேக நபர்­களை கண்­டு­பி­டித்­துள்­ளனர்.

மேலும் கைது செய்­யப்­பட்ட நபர்கள், புப்­பி­லிய, மால­க­முவ, கவே­வெல மற்றும் மனன்­வத்த ஆகிய பிர­தே­சங்­களைச் சேர்ந்­த­வர்கள் எனத் தெரிய வந்­துள்­ளது.

இவர்கள் உடும்பு இறைச்­சியை சுற்­றுலா ஹோட்­டல்­க­ளுக்கும், சில வர்த்­த­கர்­களின் வீடுகளுக்கும், பல்­வேறு வைப­வங்­க­ளுக்கும் விநி­யோ­கிப்­ப­தாக மேல­திக விசா­ரi­ணை­களில் தெரிய வந்­துள்­ளது.

கைது செய்­யப்­பட்ட சந்­தே­க­ந­பர்கள் நாவுல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நேற்று நாவுல நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களுக்கு இலவச காப்புறுதி

அரசாங்கம் முன்னெடுத்துள்ள கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கiயில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு விசேட காப்புறுதித் திட்டத்தை இலங்கை ...

%d bloggers like this: