Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | கொழும்பின் பல பகுதிகளில் நாளைய தினம் 18 மணித்தியால நீர்வெட்டு

RADIOTAMIZHA | கொழும்பின் பல பகுதிகளில் நாளைய தினம் 18 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் நாளைய தினம் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய நாளைய தினம் பிற்பகல் 1 மணிமுதல் 18 மணித்தியால நீர்வெட்டு அமுலாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கொழும்பு 13 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் நடைபெறும் என்பதோடு நவகம்புர பகுதிக்கும் நீர்வெட்டு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலக்கீழ் நீர் குழாய்களில் காணப்படும் திருத்தப்பணிகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE    

About Radio tamizha

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...