Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | கொரோனா வைரஸ், முக கவசங்கள்,ரூபாய் நோட்டுகள்,பிளாஸ்டிக் தளங்களில் எவ்வளவு நாட்கள் உயிர் வாழும்..?

RADIOTAMIZHA | கொரோனா வைரஸ், முக கவசங்கள்,ரூபாய் நோட்டுகள்,பிளாஸ்டிக் தளங்களில் எவ்வளவு நாட்கள் உயிர் வாழும்..?

கொரோனா வைரஸ், முக கவசங்களில் 7 நாட்கள் வரையும், ரூபாய் நோட்டுகள், எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் தளங்களில் சில நாட்கள் வரையும் உயிர் வாழும் என ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளதாக, பிரபல மருத்துவ இதழான தி லேன்செட் (The Lancet) கூறியுள்ளது.

அதே சமயம் வீடுகளில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகள், பிளீச் அல்லது சோப் உபயோகித்து கொரோனா வைரசை கொன்று விடலாம் எனவும் அந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

அச்சடி காகிதம், டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றில் கொரோனா வைரஸ் 3 மணி நேரத்திற்கு குறைவாகவும், மரப்பலகை, மற்றும் துணிகளில் 2 நாட்களுக்கும் அது உயிரோடு இருக்க வாய்ப்புள்ளதாகவும் இந்த ஆய்வை நடத்திய Leo Poon Litman ,Malik Peiris ஆகிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனவே முக கவசம் அணிபவர்கள் அதன் வெளிப்புறத்தை தொடாமல் இருப்பது முகவும் முக்கியம் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

About Radio tamizha

x

Check Also

4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்டத்தில் உள்ளது . ட்ரம்ப்

அமெரிக்காவில் 4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனை நிலையில் உள்ளதென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸை தடுக்கும் ...