Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | கொரோனா வைரஸ் தொடர்பில் வதந்திகளைப் பரப்பிய ஐவர் கைது!!

RADIOTAMIZHA | கொரோனா வைரஸ் தொடர்பில் வதந்திகளைப் பரப்பிய ஐவர் கைது!!

கொரோனா வைரஸ் தொற்று குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பியமையுடன் தொடர்புடைய 61 சம்பவங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் வதந்திகளை பரப்பிய பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு நேற்று விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

எதிர்வரும் 9 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் திணைக்களத்தின் கணினி குற்றத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

மஞ்சள் தூளின் அதிகபட்ச சில்லறை விலை

மஞ்சள் தூள் கிலோ ஒன்றுக்கான அதிக பட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் ...