Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | கொரோனா வைரஸ் தொடர்பில் சீனா அளித்துள்ள தகவல் குறித்து ட்ரம்ப் சந்தேகம்

RADIOTAMIZHA | கொரோனா வைரஸ் தொடர்பில் சீனா அளித்துள்ள தகவல் குறித்து ட்ரம்ப் சந்தேகம்

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து சீனா அளித்துள்ள தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீனாவை விட அமெரிக்காவில் பலி எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அது தவறான செய்தி என பதிலளித்த ட்ரம்ப், சீனா அளித்துள்ள தகவல்கள் உண்மை தானா என்பது யாருக்கு தெரியும் என்றார்.

மேலும் ஆரம்பம் முதலே கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை சீனா மூடி மறைக்கவே முயன்றதாகவும், அமெரிக்க உளவுத்துறையும் சீனாவின் புள்ளிவிவரங்கள் குறித்து சந்தேகம் எழுப்பியள்ளதாகவும் அவர் கூறினார்.

சீனாவுடன் நல்லுறவு நீடிக்கும் போதிலும், கொரோனா விஷயத்தில் சீனா நம்பத்தகுந்த நாடு அல்ல என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்டத்தில் உள்ளது . ட்ரம்ப்

அமெரிக்காவில் 4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனை நிலையில் உள்ளதென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸை தடுக்கும் ...