Home / இந்திய செய்திகள் / RADIOTAMIZHA | கொரோனா வைரஸ் எதிர்வரும் மே 29ஆம் திகதி கட்டுக்குள் வரும்

RADIOTAMIZHA | கொரோனா வைரஸ் எதிர்வரும் மே 29ஆம் திகதி கட்டுக்குள் வரும்

கொரோனா வைரஸ் பற்றி கடந்த ஆண்டே கணித்து கூறிய கர்நாடகாவை சேர்ந்த குட்டி ஜோதிடர் அபிக்யா ஆனந்த்துக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

கொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டிற்குள்ளேயே முடக்கி வைத்திருக்கும் கொரோனா வைரஸை 2019-ம் ஆண்டிலேயே கணித்து கூறியவர். இந்த கொரோனா வைரஸ் எதிர்வரும் மே 29ஆம் திகதி கட்டுக்குள் வரும் எனவும் இவர் கூறியிருக்கிறார்.

இவரது பெயர், அபிக்யா ஆனந்த். கர்நாடகாவைச் சேர்ந்தவர். பிறந்தது, 2006-ம் ஆண்டு.ஆன்மிகத்தில் அதிக நாட்டமுள்ள அபிக்யா, சிறுவயதிலிருந்தே அது சார்பான பல படிப்புகளை ஆர்வமாக படித்தார்.

வேதங்களை கற்று உணர்ந்தவர். இதிகாசங்களையும் ஆர்வமாக படித்து வருகிறார்.

இவர் 2015-ம் ஆண்டில் இருந்து ‘கான்சைன்ஸ்’ என்ற யூ-டியூப் சேனலை உருவாக்கி நிர்வகித்து வருகிறார்.

அதில் கிரகப்பெயர்ச்சி, ராசி பலன், ஜோதிட விஷயங்களை ஆதாரப்பூர்வமாக அபிக்யா குறிப்பிட்டுவருகிறார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட வீடியோவில், 2020-ம் ஆண்டின் கிரக நிலைகளையும், அதனால் ஏற்படப் போகும் விளைவுகளையும் விளக்கி இருந்தார்.

கொரோனா பற்றியும் அந்த வீடியோவில் சொல்லப்பட்டிருந்தது. கொரோனா வைரஸோடு சேர்த்து, உலக பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கும் என முன்பே கணித்துவிட்டார். அதோடு கொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் எனவும் கூறியிருக்கிறார்.

இந்த குட்டி ஜோதிடருக்கு பல பாராட்டுகளும், விருதுகளும் கிடைத்திருக்கின்றன. 2015-ம் ஆண்டு பகவத் கீதா விருதும், 2016-ம் ஆண்டு ஸ்லோகா பிரவீனா விருதும், ஸ்பந்தன்ஸ்ரீ விருதும் கிடைத்தது. தற்போது டிரெண்டிங்கில் இருக்கும், இந்த குட்டி ஜோதிடரின் யூ-டியூப் சேனலை இன்று ஏராளமானோர் பின்பற்ற தொடங்கி உள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

மகாராஷ்டிரா கட்டட விபத்தில் 41 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டி பகுதியில் 3 மாடி குடியிருப்பு கட்டட தொகுதியொன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  41  ...