Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறையும் வரை ஊரடங்கை ரத்து செய்வதில்லை- இத்தாலி

RADIOTAMIZHA | கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறையும் வரை ஊரடங்கை ரத்து செய்வதில்லை- இத்தாலி

கொரோனா நோய்த்தொற்றால் உலக அளவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியில், நோய்த்தொற்று பரவல் தீவிரமாக உள்ளதால் அதனைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 3ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் பிரான்சிஸ்கோ பொக்கியா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ‘நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு ஏப்ரல் 3-ஆம் தேதிக்குப் பிறகும் நீட்டிக்கப்படுவது இன்றியமையாதது என்று குறிப்பிட்டார். மேலும் நாட்டிலுள்ள அனைவரும் இயல்பு நிலைக்குத் திரும்பவே விரும்புவதாகக் கூறிய அவர், எனினும், கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்தபிறகு படிப்படியாக ஊரடங்கு ரத்து செய்யப்படும் என உறுதிபடக் கூறினார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE    

About Radio tamizha

x

Check Also

பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் மத்திய மாநிலமான கோகி நகரில் ஒரு பரபரப்பான வீதியில் பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழந்துள்ளனர். ...