Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | கொரோனா தடுப்பூசி தயாரானவுடன் எல்லா நாடுகளுக்கும் வழங்கப்படும்-அதிபர் டிரம்ப்

RADIOTAMIZHA | கொரோனா தடுப்பூசி தயாரானவுடன் எல்லா நாடுகளுக்கும் வழங்கப்படும்-அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி தயாரானவுடன் அது வெளிநாடுகளுக்கும் வழங்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதைத் தெரிவித்துள்ள அவர், தடுப்பூசி உருவாக்கும் பணி மிகவும் வேகமாக நடைபெறுவதாக கூறினார். பல நாடுகளுக்கு வென்டிலேட்டர்களை வழங்கியதைப் போன்று தடுப்பூசிகளும் வழங்கப்படும் என அவர் கூறினார்.

இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என டிரம்ப் நிர்வாகம் கணித்துள்ளது. அமெரிக்க நிறுவனமான மாடர்னா தடுப்பூசியின் 3 ஆம் கட்ட மனித சோதனையை அமெரிக்க விஞ்ஞானிகள் துவக்கி விட்டதாக அமெரிக்க தேசிய சுகாதார கழகம் திங்களன்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA | ஜப்பான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு வாழ்த்து

தேர்தல் வெற்றிக்காக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, மஹிந்த ராஜபக்ஸவிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தொலைபேசி வாயிலாக அவர் இந்த வாழ்த்தினைத் ...