Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | கொரோனா அபாயம் இரண்டு வாரங்களில் பாரதூரமாக அமையலாம் என எச்சரிக்கை

RADIOTAMIZHA | கொரோனா அபாயம் இரண்டு வாரங்களில் பாரதூரமாக அமையலாம் என எச்சரிக்கை

கொரோனா அபாயம் இரண்டு வாரங்களில் பாரதூரமாக அமையலாம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டிற்குள் தொற்று மூன்று கட்டங்களாகப் பரவும் அபாயமுள்ளதாகவும் தற்போது சிறு குழுவொன்றினூடாக பரவும் நிலை காணப்படுவதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கிராமங்கள் மற்றும் வீட்டிற்குள்ளேயே வைரஸ் பரவும் நிலை ஏற்பட்டால், பாரதூரமான நிலைமை ஏற்படலாம் என வைத்திய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நோயாளர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்தால் ஒட்டுமொத்த சுகாதார சேவையும் வீழ்ச்சியடையும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் மரணங்கள் ஏற்படுவதற்கான அபாயமுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்று முதல் மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

மண்டபங்களில் உள்ள ஆசன எண்ணிக்கையின் 50 வீதமானவர்கள் அல்லது 300 பேர் மாத்திரம் மங்கள நிகழ்வுகளில் பங்கேற்க இன்று (06) ...

%d bloggers like this: