Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | கொட்டடியில் மனித எச்சங்களை தேடிய அகழ்வு முன்னெடுப்பு!

RADIOTAMIZHA | கொட்டடியில் மனித எச்சங்களை தேடிய அகழ்வு முன்னெடுப்பு!

யாழ்ப்பாணம் – கொட்டடியில் மனித எச்சங்கள் காணப்பட்ட பகுதியில் அகழ்வு பணிகள் இன்று (18) மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த அகழ்வு பணிகள் தொடர்பாக படமெடுப்பதற்கோ அல்லது தகவல் சேகரிப்பதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொட்டடி மீனாட்சி அம்மன் ஆலய வீதிப்பகுதியில் தனியார் காணியொன்றில் கொட்டகை அமைப்பதற்காக நிலத்தை தோண்டியபோதே இவ்வாறு மண்டையோடு, எலும்புத் துண்டுகள் மற்றும் பெண்கள் அணியும் ஆடை ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியானது கடந்த 2006ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே இவ்விடயம் தொடர்பாக நீதிமன்றத்தில் பொலிஸார் அறிக்கை சமர்ப்பித்து, இன்று அகழ்வு பணியை முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.

About Radio tamizha

x

Check Also

பருத்தித்துறை கடலில் கஞ்சா

தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக கேரளா கஞ்சா கடத்தி வந்த மூவர் இன்று(22)பருத்தித்துறை கடலில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோந்தில் ...