Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | ஓய்வூதியகொடுப்பனவு வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை

RADIOTAMIZHA | ஓய்வூதியகொடுப்பனவு வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை

ஓய்வூதியும் பெறுவோரின் ஓய்வுதியத்தை அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கு தபால் திணை;களம் நடவடிக்கை

ஓய்வூதியும் பெறுவோரின் ஓய்வுதியத்தை அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கு தபால் திணை;களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவ ஊடாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:.

2020.04.02
பணிப்பாளர் செய்தி
செய்தி ஆசிரியர்

ஊடக அறிக்கை இலக்கம் :102 / 2020
வெளியிடப்பட்ட நேரம்: 12.15

ஊடக அறிக்கை

ஏப்ரல் மாதத்தில் தமது ஓய்வூதிய சம்பளத்தை பெற்றுக்கொள்ளும் ஓய்வூதிய சம்பள உரிமையாளர்களின் ஓய்வூதிய சம்பளத்தை அவர்களது வீட்டுக்கே கொண்டு சென்று ஒப்படைக்கும் வேலைத்தி;ட்டம் தற்பொழுது தபால் திணைக்களத்தின் பணியாளர்களினால் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அவர்கள் தெரிவித்தார்.

இதற்கமைவாக ஓய்வூதிய சம்பளத்திற்கு உரித்தானவர்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் போக்குவரத்து வசதியை பயன்படுத்தி தபால் அலுவலகங்களிற்கு வர வேண்டிய அவசியம் இல்லை. அத்தோடு ஏப்ரல் மாதம் 04 திகதியளவில் தமது ஓய்வூதிய சம்பளம் தமது வீட்டை வந்தடையாதோர் மாத்திரம் அது தொடர்பில் தமது ஓய்வூதிய சம்பளத்தை வழமையாக பெற்றுக் கொள்ளும் தபால் அலுவலகத்தின் தபால் அதிபரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெற்றுத்தருமாறு கோருமாறு தபால் மா அதிபர் மேலும் அறிவித்துள்ளார்.

நாலக கலுவேவ
அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம்

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

மஞ்சள் தூளின் அதிகபட்ச சில்லறை விலை

மஞ்சள் தூள் கிலோ ஒன்றுக்கான அதிக பட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் ...