Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | ஒரே நேரத்தில் நால்வருக்கு செயற்கைச் சுவாசத்தை வழங்கக்கூடிய சுவாசக்கருவி உருவாக்கம்

RADIOTAMIZHA | ஒரே நேரத்தில் நால்வருக்கு செயற்கைச் சுவாசத்தை வழங்கக்கூடிய சுவாசக்கருவி உருவாக்கம்

கொவிட் – 19 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகலாவிய ரீதியில் பெரும் எண்ணிக்கையிலான உயிர்கள் பலிபோயிருக்கின்றன. எமது நாட்டிலும் இவ்வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதார சேவையாளர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். அதன் ஓரங்கமாக கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவும் வகையில் நவீன உபகரணமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

கண்டி தேசிய வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி பிஹான் ஹபுதந்திரியினால் ஒரே நேரத்தில் 4 நோயாளர்களுக்கு செயற்கைச் சுவாசத்தை வழங்கக்கூடிய சுவாசக்கருவி உருவாக்கப்பட்டுள்ளது

அந்த சுவாசக்கருவி தொடர்பில் நேற்றைய தினம் குறித்த வைத்திய அதிகாரியினால் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிற்கு விளக்கமளிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் நோயாளர்களுக்கு சுவாசிப்பதில் சிக்கல் ஏற்படுகின்ற காரணத்தால், நேரடியாகவே செயற்கைச் சுவாசக்கருவிகளைப் பயன்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது.

எனினும், போதியளவான சுவாசக்கருவிகள் இன்மையால் வெளிநாடுகளில் இத்தொற்றுக்குள்ளான பலர் உயிரிழக்க வேண்டியேற்பட்டுள்ளது.

தற்போது எமது நாட்டில் சுமார் 500 சுவாசக்கருவிகள் உள்ள நிலையில், பிஹானின் கண்டுபிடிப்பின் மூலம் அந்நக்கருவிகளைப் பயன்படுத்தி 2000 நோயாளிகளுக்கு செயற்கை சுவாசத்தை வழங்கமுடியும் என்பது குறிப்பிடதக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

மஞ்சள் தூளின் அதிகபட்ச சில்லறை விலை

மஞ்சள் தூள் கிலோ ஒன்றுக்கான அதிக பட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் ...