Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | ஒரே நாளில் இரண்டரை நிமிடங்களுக்கு ஒருவர் வீதம் கொரோனாவால் உயிரிழப்பு!!

RADIOTAMIZHA | ஒரே நாளில் இரண்டரை நிமிடங்களுக்கு ஒருவர் வீதம் கொரோனாவால் உயிரிழப்பு!!

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில், ஒரே நாளில் இரண்டரை நிமிடங்களுக்கு ஒருவர் வீதம் 562 பேர் உயிரிழந்திருப்பதாக, அம்மாநில ஆளுநர் Andrew Cuomo தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அதிகபட்சமாக நியூயார்க் மாநிலத்தில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 476 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அங்கு இதுவரை 3 ஆயிரத்து 218 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைக்கு இடையே 24 மணி நேரத்தில் 562 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது இரண்டரை நிமிடங்களுக்கு ஒருவர் வீதம் உயிரிழந்திருப்பதாக நியூயார்க் ஆளுநர் Andrew Cuomo தெரிவித்துள்ளார். இதற்கடுத்தபடியாக, நியூஜெர்சி, மிச்சிகன், கலிஃபோர்னியா, மசாசூசெட்ஸ், லூசியானா, ஃபுளோரிடா மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...