Home / இந்திய செய்திகள் / RADIOTAMIZHA | எஸ்.ஜானகி அம்மா நலமாக உள்ளார் – ஜானகி மகன் தகவல்

RADIOTAMIZHA | எஸ்.ஜானகி அம்மா நலமாக உள்ளார் – ஜானகி மகன் தகவல்

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி(82). 60 ஆண்டுகளாக சினிமாவில் கான குயிலாகவே பாடி பறந்தார். 17 மொழிகளில் 48 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி உள்ளார். வயது மூப்பு காரணமாக பாடுவதை நிறுத்திக் கொண்டார். ஐதராபாத்தில் வசித்து வரும் இவரின் உடல்நலம் பற்றி அவ்வப்போது சில தவறான தகவல்கள் உலா வரும். அப்படித்தான் இப்போதும் அவரைப்பற்றி தவறான செய்தி ஒன்று சமூகவலைதளங்களில் உலா வந்தது.

இதனை மறுத்துள்ள ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா, அம்மாவிற்கு சிறிய அளவிலான ஆபரேஷன் ஒன்று நடந்துள்ளது. தற்போது அவர் உடல்நிலை சீராக முன்னேறி வருகிறது. தயவு செய்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம், அம்மா நலமாக உள்ளார் என தெரிவித்துள்ளார்.

என்னை 6 முறை கொன்றுவிட்டனர் – ஜானகி
இசையமைப்பாளர் தினா வெளியிட்டுள்ள செய்தியில், ஜானகி அம்மாவின் உடல்நலம் குறித்து அண்ணன் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திடம் பேசினேன். அவர் நலமாக, ஆரோக்கியமாக சிரித்தப்படி இருப்பதாக கூறினார். மேலும் தன்னை 6 முறை கொன்று விட்டதாக சிரித்தப்படி ஜானகி கூறியதாக எஸ்பிபி., தெரிவித்தார் என்றார்.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About Radio tamizha

x

Check Also

ஆந்திர மாநிலத்தில் பாடசாலை மாணவர்கள் 27 பேருக்கு கொரோனா

ஆந்திர மாநிலம் விஜயநகரத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பாடசாலைகள் மற்றும் ...