Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | ஊர்காவற்துறை மற்றும் கொழும்பு, ஓய்வூதியத் துறை இடங்களில் கிருமி தொற்று நீக்கி விசிறல்!!

RADIOTAMIZHA | ஊர்காவற்துறை மற்றும் கொழும்பு, ஓய்வூதியத் துறை இடங்களில் கிருமி தொற்று நீக்கி விசிறல்!!

நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடற்படை மேற்கொண்ட பல கிருமி நீக்கும் திட்டங்கள் 06 ஆம் திகதி மற்றும் 07 ஆம் திகதி, ஊர்காவற்துறை பகுதியில் மற்றும் கொழும்பு, ஓய்வூதியத் துறை ஆகிய இடங்கள் மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் கடற்படை வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (Chemical, Biological, Radiological and Nuclear) அவசரநிலை பதிலளிப்பு பிரிவு மூலம் இந்த கிருமி நீக்கும் செய்யும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது.

ஊர்காவற்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் வேண்டுகோளின் பேரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் சென்ற யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் பல இடங்கள் கடற்படை துணைத் தலைமை பணியாளர் மற்றும் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீரவின் மேற்பார்வையின் கிழ் கிருமி நீக்கும் செய்யப்பட்டன. மேலும், வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு இந்த அனைத்து இடங்களும் உள்ளடக்கி முறையாக கிருமி நீக்கும் செய்யப்பட்டன.

எதிர்காலத்திலும் வைரஸ் பரவுவதைத் தடுக்க பொது இடங்கள் மையமாகக் கொண்டு பல கிருமி நீக்கும் செய்யும் திட்டங்களை செயல்படுத்த கடற்படை திட்டமிட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE    

About Radio tamizha

x

Check Also

மன்னாரில் மஞ்சள் கட்டிகளுடன் இருவர் கைது.

மன்னாரில் ஒருதொகை உலர் மஞ்சள் கட்டிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் ...