Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | ஊரடங்கு சட்டம் நீடிப்பு – அரசாங்கம் விடுக்கும் அதிரடி தீர்மானம் இதோ

RADIOTAMIZHA | ஊரடங்கு சட்டம் நீடிப்பு – அரசாங்கம் விடுக்கும் அதிரடி தீர்மானம் இதோ

 

கொரோனா வைரஸ் பரவும் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய 6 மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை மறு அறிவித்தல் வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு சற்று முன்னர் இது குறித்த தீர்மானத்தை வெளியிட்டுள்ளது.

அத்துடன், குறித்த 6 மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களிலும் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று மாலை 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

இன்று மாலை 2 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 6ஆம் திகதி காலை 6 மணி முதல் 2 மணிவரை தற்காலிகமாக தளர்த்தப்படும்.

அத்துடன், குறித்த 19 மாவட்டங்களிலும் அதே தினம் மாலை 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.

இதேவேளை, அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனைய நடவடிக்கைகளுக்காக மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அத்தியாவசிய சேவைக்காக வழங்கப்பட்டுள்ள அனுமதியை தவறாகப் பயன்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்ட காலத்தில் மக்களின் வீடுகளுக்கே உணவு உள்ளிட்ட பொருட்களை விநியோகிப்பதற்கான திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

விவசாயிகள், சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் மற்றும் ஏற்றுமதிப் பயிர்ச்செய்கையாளர்கள் ஆகியோருக்கு தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் அரசாங்கம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, களுத்துறை மற்றும் கண்டி மாவட்டங்களில் முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் அந்த நடவடிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்பதுடன், இந்த பிரதேசங்களில் உள்நுழைவதோ அல்லது வெளிச் செல்வதோ முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

About இனியவன்

x

Check Also

உயித்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவு

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். இது தொடர்பான கோப்புகள் ...