Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | ஊரடங்கு சட்டம் தொடர்பில் நான் தனியாக எந்த ஒரு தீர்மானத்தையும் மேற்கொள்வதில்லை- ஜனாதிபதி

RADIOTAMIZHA | ஊரடங்கு சட்டம் தொடர்பில் நான் தனியாக எந்த ஒரு தீர்மானத்தையும் மேற்கொள்வதில்லை- ஜனாதிபதி

ஊரடங்கு சட்டம் தொடர்பில் நான் தனியாக எந்த ஒரு தீர்மானத்தையும் மேற்கொள்வதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, கொரோனா வைரஸ் பரவல் தொடர்பிலும், தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் தொடர்பிலும், அத்தியாவசிய சேவை தொடர்பிலும் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலப்படுத்தப்படுவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெளிவுப்படுத்தியுள்ளார்.

நாட்டில் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் தொடர்பான தீர்மானம் வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைய தீர்மானிக்கப்படுகிறது. மாறாக ஊரடங்கு சட்டம் தொடர்பில் நான் தனியாக எந்த ஒரு தீர்மானத்தையும் மேற்கொள்வதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About Radio tamizha

x

Check Also

உயித்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவு

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். இது தொடர்பான கோப்புகள் ...