Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் மீறி ஜெபக் கூட்டத்தை நடத்தியவர்கள் கைது!!

RADIOTAMIZHA | ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் மீறி ஜெபக் கூட்டத்தை நடத்தியவர்கள் கைது!!

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் சந்தர்ப்பத்தில் புத்தளம் மாவட்டம் தங்கொட்டுவை – மோருக்குளிய பிரதேசத்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் ஜெபக் கூட்டத்தை நடத்தியவர்களை தங்கொட்டுவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தங்கொட்டுவை சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகம் மற்றும் தங்கொட்டுவை பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுகாதார துறையினர் மற்றும் பொலிஸார் வழங்கியுள்ள ஆலோசனைகளை மீறி இவர்கள் ஜெபக்கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்ததாக தங்கொட்டுவை சுகாதார அதிகாரியின் அலுவலகம் கூறியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் மோருக்குளிய பிரதேசத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தின்உறவினர்கள் என தெரியவந்துள்ளது.

மேலும் இவர்கள் மாரவில நீதவான் நீதிமன்றத்தில்ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

About Radio tamizha

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...