Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | ஊரடங்கு உத்தரவு கால அனுமதிப்பத்திரங்களின் கால அவகாசம் நீடிப்பு!!

RADIOTAMIZHA | ஊரடங்கு உத்தரவு கால அனுமதிப்பத்திரங்களின் கால அவகாசம் நீடிப்பு!!

எதிர்வரும் 10ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள ஊரடங்கு உத்தரவு காலப்பகுதிக்கான அனுமதி பத்திரங்களின் கால அவகாசத்தை எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அத்தியாவசிய தேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள குறித்த அனுமதிப்பத்திர காலமே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு இதற்கு மேலதிகமாக துறைமுகம், கப்பல் நிறுவனம், சுங்கம், குடிவரவு, சுகாதாரம், பெற்றோலியம், தொலைத்தொடர்பு, புகையிரதம், திறைசேறி, மத்திய வங்கி உள்ளிட்ட அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அனுமதிப்பத்திரம் மற்றும் தொழில்சார் அடையாள அட்டைகளின் காலமும் இம்மாதம் 30ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE    

About Radio tamizha

x

Check Also

உயித்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவு

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். இது தொடர்பான கோப்புகள் ...