Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | ஊரடங்கு உத்தரவின் போது வீடுகளுக்கே மருந்துகளை பெற்றுக்கொள்ள புதிய வழிமுறை!!

RADIOTAMIZHA | ஊரடங்கு உத்தரவின் போது வீடுகளுக்கே மருந்துகளை பெற்றுக்கொள்ள புதிய வழிமுறை!!

ஊரடங்கு உத்தரவின் போது பொதுமக்கள் மருந்துகளை பெற்றுக்கொள்வதற்கு புதிய தொழில்நுட்ப முறைமையினை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, வாட்ஸ்அப், வைபர் மற்றும் இமோ ஆகிய செயலிகளின் ஊடாக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மருந்துகள் பட்டியலை மருந்தகங்களுக்கு அனுப்ப முடியுமென காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன் ஊடாக அருகிலுள்ள மருந்தகங்களை தொடர்புகொள்ள முடியாத சந்தர்ப்பங்களில், குறித்த பிரதேச காவல்துறையினருக்கு அறிவிக்க முடியுமென தெரிவிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தொலைபேசி அழைப்பை பெற்றதும், அனைத்து மருந்தகங்களுக்கும் இது தொடர்பில் அறிவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE      

About Radio tamizha

x

Check Also

ரஞ்சனுக்கு எதிரான மற்றுமொரு வழக்கு விசாரணை

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு சம்பந்தமாக முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றுமொரு வழக்கை எதிர்வரும் நவம்பர் ...