Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | ஊரடங்குச் சட்டத்தை மீறிய இருவர் கடற்படையினரால் கைது!!

RADIOTAMIZHA | ஊரடங்குச் சட்டத்தை மீறிய இருவர் கடற்படையினரால் கைது!!

ஊரடங்குச் சட்டத்தை மீறிய இரண்டு பேர்  04ம் திகதி அன்று ஆருகம்பை முஹுது மகா விஹாரய சந்திக்கு அருகே அமைக்கப்பட்ட சாலைத் தடையில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

நாட்டில் பேரழிவு நிலைமை கட்டுப்படுத்த மற்றும் பொது மக்களின் பாதுகாப்பிற்காக தீவு முழுவதும் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறிய இருவரை தென்கிழக்கு கடற்படைக் கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் மோட்டார் சைக்களில் பயணித்த போது ஆருகம்பை முஹுது மகா விஹாரய சந்திக்கு அருகே அமைக்கப்பட்ட சாலைத் தடையில் கடமையில் இருந்த கடற்படை வீரர்களால் கைது செய்யப்பட்டனர். மேலதிக விசாரணையில் 02 நபர்களும் பொத்துவில் பகுதியில் வசிப்பவர்கள் என்பது தெரியவந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மோட்டார் சைக்கிளுடன் பொத்துவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...