Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | உலக சுகாதார அமைப்பின் தலைவர் பிரதமர் மோடிக்கு பாராட்டு

RADIOTAMIZHA | உலக சுகாதார அமைப்பின் தலைவர் பிரதமர் மோடிக்கு பாராட்டு

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு உதவும் வகையில் பிரதமர் மோடி அறிவித்துள்ள உதவிகளுக்கு, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா பரவலை கட்டுப்படுப்படுத்தும் விதமாக உலகநாடுகள் அறிவித்துள்ள ஊரடங்கால் ஏழை மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு  இந்தியாவில் ஏழை மக்களுக்கு விலையில்லா ரேஷன் பொருட்கள், 3 மாதங்களுக்கு இலவச எரிவாயு, நிதியுதவி என 1 லட்சத்து 82 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உதவிகளை அறிவித்துள்ள பிரதமர் மோடியை பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் மத்திய மாநிலமான கோகி நகரில் ஒரு பரபரப்பான வீதியில் பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழந்துள்ளனர். ...