Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | உலக அளவில் உச்சத்தை எட்டியுள்ள கொரோனா பாதிப்பு

RADIOTAMIZHA | உலக அளவில் உச்சத்தை எட்டியுள்ள கொரோனா பாதிப்பு

சர்வதேச அளவில் கொரோனா தொற்று பாதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு, நேற்று புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அதன்படி, நேற்று ஒரே நாளில் உலக அளவில் 2 லட்சத்து 92 ஆயிரத்து 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 6 ஆயிரத்து 812 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பில் பெரும்பகுதி அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய 4 நாடுகளில் மட்டும் பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மாதம் 24ம் தேதி 2 லட்சத்து 84 ஆயிரத்து 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனதே, சர்வதேச அளவில் ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பாக இருந்தது.

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA | ஜப்பான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு வாழ்த்து

தேர்தல் வெற்றிக்காக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, மஹிந்த ராஜபக்ஸவிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தொலைபேசி வாயிலாக அவர் இந்த வாழ்த்தினைத் ...